ஒற்றைக் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி ஜீரகள்ளி ஆகிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை கருப்பன் யானை தினந்தோறும் வனத்தை ஒட்டியுள்ள கிராமத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம், கரும்பு ஆகிய விளைபயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து விவசாயிகள் தினந்தோறும் இரவு நேரங்களில் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர் அப்போது இரவு காவலுக்கு சென்ற இரு விவசாயிகளை கருப்பன் யானை தாக்கிக் கொன்றது.
இதைத் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் .இதையடுத்து ஒற்றை கருப்பன் யானையை பிடிக்க அரசிராஜா முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளதுஇ மேலும் 4 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனப் பணியாளர்கள் ஒற்றை யானையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக நேற்றிரவு மரியபுரம் தொட்டி மற்றும் ரங்கசாமி கோயில் வழிதடத்தில் யானையை பிடிப்பதற்காக பலா பழங்களை வைத்து விடிய விடிய கண்காணிப்பணியில் ஈடுபட்டனர். தினந்தோறும் வரும் ஒற்றை கருப்பன் யானை நேற்றிரவு வரவில்லை இதையடுத்து அடுத்த கட்டமாக வனத்துக்குள் சென்று கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பணியில் வன பணியாளர்கள் ஈடுபட்டுள்னர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News