மரியான் பயோடெக் இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர் - WHO எச்சரிக்கை

நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை 2022ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில் நுரையீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட டாக் ஒன் மேக்ஸ் என்ற இருமல் மருந்தை கொடுத்ததாகவும் அதில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மூன்று முதல் ஏழு நாட்களுக்கு என, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு தடவை 2.5 எம்எல் என்ற தர அளவில் 2 முதல் 7 நாள்களுக்கு இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், அதை குடித்த பின்னர் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

image

உஸ்பெகிஸ்தான் நாட்டின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் தலைமையகத்தை கொண்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணையை மத்திய அரசு விசாரணை நடத்திவருகிறது.

உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு உஸ்பெகிஸ்தான் நாடும் முடிவு செய்தது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் காம்பியா நாட்டிலும் இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் அதே குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, தற்போது AMBRONOL, DOK - 1 Max ஆகிய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த இருமல் மருந்துகளில் குறைபாடு இருப்பதாகவும் கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post