தும்பிக்கை இன்றி நம்பிக்கையுடன் சுற்றிவரும் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை



அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாமல் சுற்றி வரும் குட்டியானை வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி, ஏலாட்டு முகம் வன சரகத்தில் உள்ள எண்ணபனை எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் சுற்றி வந்துள்ளது. இந்நிலையில், யானைகள் கூட்டத்தில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன குட்டி யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மாவட்ட சிறப்பு அதிகாரி சிலேஸ் சந்திரதா, யானை கூட்டத்தில் தும்பிக்கை இல்லாமல் இருந்த குட்டி யானையை படம் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வனத்துறையினர், யானையின் தும்பிக்கை அறுந்து விழுந்ததா? அல்லது பிறக்கும்போதே தும்பிக்கை இல்லாமல் பிறந்ததா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

image

தாய் யானையின் அரவணைப்பில் தும்பிக்கை இல்லதா குட்டி யானை உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது என்றும் மேலும் யானையின் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தும்பிக்கை இல்லாமல் சுற்றி வரும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post