லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய சிறுவன் செய்த கொடூர செயல்

விளாத்திகுளத்தில் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய 17 வயது சிறுவன், இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மீரான் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கார்த்திக் ராஜிடம் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிச் சென்றுள்ளார்.

image

அப்பேது பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திக் ராஜை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், கார்த்திக் ராஜின் உடலைக் கைப்பற்றியது உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

image

இதையடுத்து தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post