A gold shield taken to the bank under police protection

தேவர் குருபூஜைக்கு கொண்டுவரப்பட்ட தங்க கவசம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜைக்காக கடந்த 26 ஆம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகள், தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மதுரையில் இருந்து தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக தங்கக் கவசத்தைக் கொண்டு வந்து தேவர் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

image

இதனையடுத்து தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா முடிவடைந்ததை அடுத்து தேவரின் திருவுருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் முன்னிலையில் மதுரை வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post