கமல்ஹாசன் உருவத்தை வித்தியாசமாக வரைந்து அசத்திய ஓவியர்

கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவர் கமல் உருவத்தை வித்தியாசமாக வரைந்து அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்திலும் ஓவியத்தில் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

image

இதையடுத்து தனது முழங்கால் இடுக்கில்  பிர்ஷை வைத்துக் கொண்டு கமல் படத்தை 20 நிமிடங்களில் வித்தியாசமாக வரைந்து அசத்தியுள்ளார்.

image

பொதுமக்கள் அவர் வரைந்துள்ள கமல்ஹாசனின் ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்ததோடு, ஓவியர் செல்வத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post