தன் பாலின ஈர்ப்பு காதல் விவகாரம்:மாணவி தற்கொலை முயற்சி

பென்னாகரம் அருகே இரண்டு கல்லூரி மாணவிகளுக்குள் ஏற்பட்ட தன் பாலின ஈர்ப்பு விவகாரத்தில் காவல்  நிலையத்தில் ஒரு மாணவி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகேயுள்ள ஏர்கோல்பட்டியைச் சேர்ந்த சிவபிரகாஷ் என்பவரின் மகள் காணவில்லை என்று சிவபிரகாஷ் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பட்டக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடைய மகள் என்பவர் சிவபிரகாஷின் மகளை அழைத்துச் சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஏரியூர் காவலர்கள் கோயம்புத்தூர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

image

இதில் மூர்த்தியின் மகள் நங்கவள்ளி சக்தி கல்லூரியில் பிஎஸ்சி பயோ டெக்னிக்கல் முடித்துவிட்டு கோயம்புத்தூர் டைட்டல் பார்க்கில் ட்ரைனிங்கில் இருந்து வருவதாகவும், இந்நிலையில், அதே கல்லூரியில் பிஎஸ்சி பயோ டெக்னிக் மூன்றாம் வருடம் படித்து வந்த சிவபிரகாஷின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும், ஏரியூரில் இருந்து கல்லூரி வாகனத்தில் தினமும் சென்று வந்துள்ளனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக விசாரனையில் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்காக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வான்மதி, இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து போக முடியாது என்று தெரிவித்த நிலையில் மூர்த்தியின் மகளை காவல் நிலைய கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அந்த மாணவி மறைத்து வைத்திருந்த பிளேடால் வலது கை மணிக்கட்டில் லேசாக அறுத்துக் கொண்டும் கழுத்தில் இரண்டு அங்குலம் நீளத்திற்கு அறுத்துக் கொண்டுள்ளார். இதை கண்ட காவலர்கள் மாணவியை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

image

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post