பெண்ணைத் தொட வீட்டிற்குள் புகுந்தவருக்கு தர்ம அடி.!

சென்னை புழல் அருகே பெண் ஒருவரை தொடுவதற்காக பெட் கட்டியதாக மது போதையில், வீடு ஒன்றில் புகுந்த நபரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை அடுத்த புழல் புத்தகரம் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபரை பொது மக்கள் பிடித்து அடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நீ யார் எதற்கு வந்தாய் என கேட்பதற்கு, தமது நண்பர்கள் பெண் ஒருவரை தொட சவால் விட்டதாகவும், அதற்காக பெட் கட்டி வந்ததாகவும் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இவ்வாறு செய்ய தூண்டிய நபர்கள் யார் என கேட்கும் பொது மக்களுக்கு தலையை அறுத்தாலும் சொல்லமாட்டேன் என மதுபோதையில் கூறும் மர்ம நபரை அப்பகுதி மக்கள் அம்பத்தூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

image

ஆனால் புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதானதால், சம்பவம் குறித்து புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post