விபரீதத்தில் முடிந்த பள்ளிப்பருவ காதல் - மாணவர்கள் மேற்கொண்ட தவறான முடிவு!

அறந்தாங்கி அருகே அரசுப் பள்ளி மாணவி காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது 15 வயது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் லட்சுமணன் என்பவரின் மகன் அருண் என்பவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

image

இந்நிலையில் இவர்களது காதலை அறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து அருணின் சகோதரிக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது இந்த திருமணத்திற்கு மாணவி சென்று வந்துள்ளார். இதனை மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவியை காணாததால் தேடியுள்ளனர்.

image

அப்போது கோவில் அருகேயுள்ள புளியமரத்தில் இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் நாகுடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post