நாமக்கல்: தேவை அதிகரிப்பால் முட்டை விலை கிடுகிடு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் உயர்ந்த முட்டை விலை ஒரே நாளில் 50 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி மாதம், விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த நிலையில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரித்துள்ளதால் விலை உயர்வு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து ஒரே நாளில் 50 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து 5 காசுகள் விலை உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை 2 நாட்களில் 55 காசுகள் உயர்ந்தது குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும்போது... தமிழகத்தில் ஆடி பண்டிகை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் சில்லறை விற்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் வட மாநிலங்களில் முட்டை விற்பனை அதிகரித்து தொடர்ந்து விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

தமிழகம், கேரளாவிற்கு அதிகளவு முட்டை தேவை ஏற்பட்டதால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post