காதலிக்கும் அனைவரிடத்திலும் இயற்கையாகவே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது பொசசிவ்னெஸ். இந்த பொசசிவ்னஸ் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதுவே அந்த உறவுக்கு நல்லதாக இருக்கும்.
ஆனால் எப்போ அந்த பொசசிவ்னெஸ் பொறாமையுடன் கலந்து கைமீறி போகும் போது, அந்த உறவுக்குள் பல பிரச்னைகள் உண்டாக ஒரு மையக்கருவாக அமைகிறது. பொசசிவ்னெஸால்தான் காதல் உறவுகள் முடிவுக்கு வருவதாகவும் சில தரவுகள் மூலம் தெரிய வருகிறது.
அதன்படி, ஸ்டைல்கிரேஸ் போர்ட்டல் , பொசசிவ்னெஸ் உடைமைத்தன்மையின் அறிகுறிகள். இந்த கட்டுரை உறவுகளில் உடைமைத்தன்மை அதாவது பொசசிவ்னெஸை சமாளிப்பதற்கான தீர்வுகளையும் வழங்கியிருக்கிறது. அதில், பொசசிவ் ஆக இருக்கும் காதலர்கள் பற்றியும், அவற்றில் இருந்து எப்படி விடுபடுவது பற்றியும் விளக்கியிருக்கிறது.
1) இணையருக்கு பிடித்தமானவர்களுடன் பேச விடாமல் செய்வது ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கிறது. இதனால் அன்புக்குரியவர்களின் நேரத்தை முழுவதுமாக ஒருவரே ஆக்கிரமித்திருப்பார்கள்.
2) தன்னுடைய காதலனோ காதலியோ சுயமாக செலவிடுவதை தடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதுவும் பொசசிவ்னெஸ்கான அறிகுறிதான். ஏனெனில் எதுவாக இருந்தாலும் தன்னால்தான் நடக்கவேண்டும், ட்ரெஸ், பேக் என எது வாங்குவதாக இருந்தாலும் தன்னால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என நினைப்பார்கள்.
3) உங்கள் பார்ட்னர் தனக்குள்ளேயே இன்செக்யூரிட்டியை வைத்திருக்கும் போது அது பொறாமையை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் குறைவான நேரத்தை செலவிட வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். உங்களுடைய நேரம் அனைத்தும் அவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இது ரிலேஷன்ஷிப்பிற்கு ஒரு அபாயக்குறியாகத்தான் இருக்கும்.
பொசசிவ்னெஸ் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
Ex நினைவுகளுடன் இருத்தல் கூடாது:
உங்களுடைய முன்னாள் காதல் உறவில் ஏற்பட்ட பிரச்னையை நினைத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. இது நல்ல ரிலேஷன்ஷிப்பிற்கு தடையை உண்டாக்கும். அதிலிருந்து வெளியேறுவதே சாலச்சிறந்தது.
பரஸ்பர நண்பர்களுடன் பழகுதல்:
இருதரப்பு நண்பர்களுடன் நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்வதுதான் உறவில் பொசசிவ்னெஸ் ஏற்படாமல் இருக்க சிறந்த வழி. இப்படி செய்வதால் தேவையில்லாத பொசசிவ் எண்ணங்கள் வராமல் இருக்கும். மேலும் நீங்களும் உங்களுடைய நண்பர்களுடன் நேரம் செலவிட ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும்.
பொழுதுபோக்கில் ஈடுபடுதல்:
காதல் உறவுகள் எப்போதும் வாழ்வின் அங்கம்தான் என்பதை உணருங்கள். அதையும் தாண்டி பல நல்ல நல்ல விஷயங்களை செய்யுங்கள். உதாரணமாக இருவரும் சேர்ந்து புத்தகம் படிப்பது, நடனம் ஆடுவது, எழுதுவது என கவனத்தை செலுத்தலாம். இது உறவை மேலும் பலப்படுத்த உதவும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News