பூரண குணமடைந்தார் டி.ராஜேந்தர்... மனநிறைவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய சிம்பு!

கடந்த மாதத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார்.

டி.ராஜேந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து உயர்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தர். இதையடுத்து அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். இதற்காக அவரது மகனும் நடிகருமான சிம்பு, தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

image

வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிம்பு, தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை குணமடைந்த நிலையில், தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் டி.ராஜேந்தர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post