தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, இங்கேயும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட திமுக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நீட்தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அண்ணாமலை, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போலவே தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஏற்படும் என்று கூறினார்.
திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன், நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News