பரோட்டா கிரேவியில் பல்லி - சாப்பிட்டவருக்கு வாந்தி .. உணவகத்தை மூட உத்தரவு

ஈரோட்டில் பரோட்டாவிற்கு ஊற்றிய கிரேவியில் பல்லி இருந்ததால் அதனை சாப்பிட்ட ஒருவர் வாந்தி எடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு அருகே ஓடாநிலையைச் சேர்ந்த அமுதா, சரவணன் மற்றும் அரச்சலூரைச் சேர்ந்த சந்திரன், ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அமுதாவின் கணவர் செந்தில்குமார் மாற்றுத்திறனாளி என்பதால் உதவிதொகைக்கு விண்ணப்பித்து வீடு திரும்பினர். செல்லும் வழியில் காளை மாட்டு சிலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருத போது அதற்கு குழம்பு கேட்டுள்ளனர்.

image

ஊழியர்கள் ஊற்றிய குழம்பில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அப்போது சந்திரன் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் ‌அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் நால்வரும் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து புகார் எதுவும் அளிக்காமல் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பல்லி விழுந்த புரோட்டா குழம்பு பரிமாறிய உணவகத்தின் உள்கட்டமைப்பு சேதமடைந்த காரணமாக அந்த உணவகத்தை மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post