சுட்டெரிக்கும் வெயில்: சன் ஸ்க்ரீன் பயன்படுத்துபவர்கள் இந்த தவறுகளை செய்யாதீங்க!

வெயில்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சிறந்த வழி சன்ஸ்க்ரீன். இது சூரிய புற ஊதா கதிர்களால் சரும செல்கள் பாதிப்படைந்து கேன்சர் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக அதிக SPF கொண்ட க்ரீம்கள் சருமம் உடையாமல் தடுக்கிறது. இருப்பினும் முறையாக பயன்படுத்தாவிட்டால் பாதுகாப்பதைவிட அதிக சேதத்தை விளைவிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்துபவர்கள் செய்யும் பொதுவாக தவறுகளை தெரிந்துகொள்வது அவசியம்.

1. பழைய, காலாவதியான சன்ஸ்க்ரீன்
2. மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ பயன்படுத்துதல்
3. 50க்கும் குறைவான SPF கொண்ட க்ரீம்களை பயன்படுத்துதல்
4. வெளியே சென்றபிறகு சன்ஸ்க்ரீன் தடவுதல்.

எப்போதும் வெளியே செல்வதற்கு 15- 30 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் தடவுவது அவசியம். அதேபோல் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தடவுவதும் அவசியம், குறிப்பாக நீச்சலடிப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.

image

எவ்வளவு சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும்?

முகத்தை சூரியக்கதிர்கள் சேதப்படுத்துவதை தவிர்க்க இரண்டு விரல்கள் அளவிற்கு க்ரீமை தடவவேண்டும். உடல் முழுவதும் தடவ இதுபோல் 5 மடங்கு தேவை. மேலும் SPF 50க்கும் அதிகமான சன் ஸ்க்ரீனை பயன்படுத்துவது மிகமிக அவசியம்.

சன்ஸ்கீரின்கள் வைட்டமின் டி உடலுக்குள் செல்வதை அனுமதிப்பதில்லை. சரும செல்கள் சேதமடைவதைத்தான் தடுக்கிறது. எனவே முடிந்தவரை 11 - 3 மணிவரை சூரிய ஒளியில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post