நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கிறது ரஜினிகாந்தின் 169-வது படமான 'ஜெயிலர்'. படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தேசிய அளவில் #Jailer என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
இப்படி இருக்கையில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் கசாப்புக் கடைக்காரர் பயன்படுத்தும் கத்தியை தொங்க விட்டிருக்கும் ரஜினியின் ஜெயிலர் பட டைட்டில் போஸ்டரை வைத்து ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பார்ப்புகளையும் என்ன மாதிரியான கதைக்களமாக இருக்கும் என அனுமானித்து பதிவிட்டு வருகிறார்கள்.
அதன்படி பீஸ்ட் படத்தில் ரா ஏஜென்டாக வீரராகவன் கேரக்டரில் நடித்த விஜய் பயன்படுத்திய கசாப்புக்கடை கத்தியுடன் ஒப்பிட்டு பீஸ்ட்டின் சீக்வலாக ஜெயிலர் இருக்குமா என்று பதிவிட்டு வருகிறார்கள்.
இதுபோக, விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜை வைத்து லோகி சினிமாடிக் யூனிவெர்ஸ் இருப்பதுபோல பீஸ்ட், ஜெயிலரை வைத்து நெல்சன் யூனிவெர்ஸ் உருவாகப் போகிறதா எனவும் ட்வீட்கள் பறக்கின்றன.
மேலும், ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் வில்லன் கும்பல் அதாவது சிவராஜ்குமார் உள்ளிட்டோர் செய்யும் அடாவடிகளை அடக்கும், தடுக்கும் ஜெயிலராக ரஜினி அவருக்கே உரிய துடிப்பான துள்ளலான நடிப்பை வெளிப்படுத்துவார் என தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, நீங்க எல்லாரும் நினைப்பது போல ரஜினி ஜெயிலரா இருக்க மாட்டாரு. ஆனா கசாப்பு கடைல கறி வெட்டும் ஆளாக ரஜினிய நெல்சன் தன்னோட டார்க் காமெடி ரகத்தில் நடிக்க வெக்கப் போறாருனும் ட்வீட் போட்ருக்காங்க. ரஜினி, பிரபு நடிப்பில் 1988ல் வெளியான குரு சிஷ்யன் படத்தோடும் ஒப்பிட்டு ஜெயிலர் படம் தொடர்பாக பதிவிட்டும் வருகிறார்கள்.
படத்தின் வேலைகள் தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முனே இப்படியாக கலவையான விமர்சனங்கள் கருத்துகளை தெரிவிப்பது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அறிய முடிகிறது.
ALSO READ:
விட்டதை பிடிக்க துடிக்கும் நெல்சன்? ரஜினி 169 தகவலால் எகிறும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News