தென் தமிழகத்தில் முதல்முறையாக கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர் மதுரை மருத்துவர்கள்.
சர்க்கரை நோயினால் முதல்கட்டமாக சிறுநீரகம், கண்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்படைந்த ஏராளமானோர் உள்ளனர். சர்க்கரை நோயின் முதல் நிலை பாதிப்பால் சிறுநீரக அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு மீண்டும் சிறுநீரகம் பாதிப்படையும். அவர்கள் கணையம் மற்றும் சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்தால் 10 முதல் 12 வருடம் ஆரோக்கியமாக வாழலாம். இந்நிலையில் சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து நம்பிக்கை அளித்து வருகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ நிபுணர்களின் முயற்சியால் தெலுங்கானா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சசிகாந்த் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரித்தா ஆகிய இருவரும் சிறுநீரகம் பாதிப்படைந்து செயலிழந்த நிலையில் சிறுநீரக உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.
வழக்கமான அறுவை சிகிச்சைகளைக் காட்டிலும் கணைய, சிறுநீரக அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் 40 வயதிற்குட்பட்ட முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் பூரண குணமடைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News