தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?

ஒருவர் ஒருநாளில் எத்தனை மணிநேரம் தூங்குகிறார் எவ்வளவு நன்றாக தூங்குகிறார் என்பதையே ’தூக்க சுகாதாரம்’ (Sleep hygiene) என்று வரையறுக்கின்றனர். ஒருவருக்கு உடல் சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்க சுகாதாரமும் மிகமிக முக்கியம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

செய்யவேண்டியவை:

தினசரி வேலைகளை அட்டவணையிடுங்கள். இது தூக்க நேரத்தை கணக்கிடவும், தினசரி அதை வழக்கமாக்கவும் உதவும்.

கெமோமில் தேநீர், லாவெண்டர் தேநீர் போன்ற ஹெர்பல் தேநீர்களை அருந்துங்கள். இது உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

உடல் சௌகர்யம் தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே படுக்கைக்கு செல்லும்போது தளர்ந்த சௌகர்யமான ஆடைகளை அணியுங்கள். படுக்கைகளை சரிசெய்யுங்கள். தூங்கும் இடத்தை தொந்தரவுகளின்றி வையுங்கள்.

image

செய்யக்கூடாதவை:

பகல் மற்றும் மாலைநேரத்தில் தூங்குவதை தவிர்த்திடுங்கள். இது இரவு தூக்கத்தை பாதிக்கும்.

தூங்கப்போவதற்கு 4-5 மணிநேரத்திற்கு முன்பு கஃபைன் பொருட்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி செய்துமுடித்தவுடனோ அல்லது உணவு சாப்பிட்ட உடனோ படுக்கைக்கு செல்வதை தவிர்க்கவும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post