
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் குளித்த, கல்லூரி மாணவர் உள்பட இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் பர்னிச்சர் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் 7 பேர் ஞாயிறு அன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஆழியார் அணை கட்டு பகுதியில் குளிக்க இறங்கியுள்ளனர்.

அப்போது கோவை கணபதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்ரீராமர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்ற அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன்குமாரும் தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2மணி நேரம் போராடி இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News