வெயில் கால கண் பிரச்னைகள் என்னென்ன? - பாதுகாப்பு நெறிமுறைகள்

வெயில்காலம் வந்தாலே பெரும்பாலானோருக்கு கண் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுடன் கண் பிரச்னைகள் தொடர்புடையது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் வெயில்காலத்தில் கண் பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்கிறார் கண் மருத்துவர் ஜிம்மி மிட்டல். மேலும் கண் எரிச்சல், கண் வறட்சி, கண் சோர்வு, வலி மற்றும் அழற்சி போன்றவை வெயில்காலத்தில் பொதுவாக ஏற்படும் கண் பிரச்னைகள் என்கிறார் அவர். மேலும் அதிக வெப்பத்தால் உடலில் மட்டும்தான் வியர்க்குரு வருவதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் கண்களுக்குள்ளும் சிறு சிறு வெப்பக்கட்டிகள் ஏற்படுவது. இதனால் கண் பார்வை மங்கலடைதல், வறண்டு, கண்களுக்கும் ஏதோ உருத்துவது போன்ற உணர்வை கொடுக்கும் என்கிறார் மிட்டல்.

image

வெளியே செல்லும்போது சன்கிளாஸ் அணியவும்

வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சருமத்தை பாதுகாக்க சன் ஸ்க்ரீன் தடவுவது எப்படியோ அதேபோல் கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது அவசியம். குறிப்பாக அதிக வெயில்நேரத்தில் செல்லும்போது பெரிய கிளாஸ்களை தேர்ந்தெடுப்பது சிறந்த பாதுகாப்பை கொடுக்கும். இது புற ஊதா கதிர்கள் கண்களை தாக்காமல் பாதுகாக்கும். இல்லாவிட்டால் கண்கள் வறண்டு அசௌகர்யம் ஏற்படுவதுடன் கண்ணீர் வரும்.

image

ஹைட்ரேட்டேடாக இருக்கவும்

போதுமான அளவு நீர் மற்றும் நீராகாரங்களை எடுத்துக்கொள்வது உடலை மட்டுமல்ல கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வெயில்காலத்தில் கண்களில் கண்ணீர் படலம் ஆவியாகிவிடுவதால் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். மேலும் ஆல்கஹால் மற்றும் அதிக காபி அருந்துவது உடலை வறட்சியாக்கும்.

image

ஐ ட்ராப்ஸ் பயன்படுத்துங்கள்

சிலநேரங்களில் ஹைட்ரேட்டேடாக இருப்பது மட்டும் போதாது. கண் மருத்துவருடன் ஆலோசித்து, அவர் பரிந்துரைக்கும் ஐ ட்ராப்பை எப்போதும் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படலாம். இதனால் கண்களில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.

image

சன் ஸ்க்ரீன் தடவும்போது கவனம் வேண்டும்

வெயில்காலத்தில் சன் ஸ்க்ரீனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதே சமயம் கண்களை சுற்றி மற்றும் கண்ணிமைகளின்மீது சன் ஸ்கீர்ன் தடவுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அதிக SPF உடைய சன் ஸ்க்ரீன்கள் தெரியாமல் கண்களில் பட்டுவிட்டால் அதீத அசௌகர்யத்தை உருவாக்கும். மேலும் அரிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் இது நிரந்தரமான கண் பிரச்னைகளை ஏற்படுத்தாது என்றாலும், கண்களின் மேற்பரப்பில் கெமிக்கல் புண்களை ஏற்படுத்தும். இதனால் சில நாட்களுக்கு அசௌகர்யம் மற்றும் வலி இருக்கும்.

image

மதிய நேர சூரிய ஒளியை தவிர்க்கவும்

காலை 11 யிலிருந்து மாலை 3 மணிவரை வெயிலில் நடமாடுவதை தவிர்த்துவிடலாம். இந்த நேரங்களில் சூரிய ஒளி அதிகமாக இருப்பதுடன் புற ஊதா கதிர்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். கண் பார்வை நன்றாக இருக்க புற ஊதா கதிர்களிலிருந்து கண்களை பாதுகாப்பது அவசியம்.

image

கண் பாதுகாப்பான்கள் அணியவும்

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் நீச்சல், தோட்டவேலை அல்லது மர வேலைகளில் ஈடுபடும்போதும் கண் பாதுகாப்பான்களை அணிவது அவசியம். கண் கண்ணாடிகள், முகக் கவசங்கள் போன்றவற்றை அணிந்துகொள்வது கண்கள் மற்று முகத்தை பாதுகாக்கும். ஏதேனும் கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெறுவது அவசியம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post