நீலகிரி: வாகன வெளிச்சத்தில் சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு

முதுமலையில் சாலையை கடக்க முயன்ற ராட்சத மலைப்பாம்பு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து மாவனல்லா செல்லும் சாலையில் ராட்சத மலைப்பாம்பு சாலையை கடக்க முயற்சி செய்திருக்கிறது. கடும் இருளில் அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்றதை கண்டு வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

image

இதையடுத்து எதிரே வந்த வாகனங்களையும் நிறுத்தி மலைப்பாம்பு சாலையை கடந்து செல்வதற்கு உதவியிருக்கிறார்கள். இறுதியாக மலைப்பாம்பு எவ்வித பாதிப்பும் இன்றி சாலையை கடந்து சென்றதாக அதனை வீடியோ பதிவு செய்த நபர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பெரும்பாலும் இரவு நேரங்களில் இதுபோல சாலையை கடக்கும் மலைப்பாம்புகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி உயிரிழக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post