தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததாக கூறப்படும் நிகழ்வை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

image

உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பேராலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாக நடைபெற்றது.

இதையும் படிக்கலாம்: ‘வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது‘ - எதிர்க்கட்சி தலைவர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post