சென்னை: பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் -முக்கிய சாலைகளில் நேற்றிரவு தீவிர வாகன தணிக்கை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியானதால், நேற்றிரவு முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சாலை விதிகளை மீறி வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் அபராதம் விதித்தும், இரவு நேரங்களில் வீணாக திரியும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறியும் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

Post a Comment

Previous Post Next Post