தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கொளத்தூரில், மேச்சேரி, நங்கவள்ளி, புதுச்சாம்பள்ளி, சிந்தாமணியூர் உள்ளிட்ட இடங்களில் 2 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து அப்பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சூறைகாற்றால் பல இடங்களில் சுமார் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காற்றுடன் கனமழை பெய்தது. அதில் 2 வீடுகள் மற்றும் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. மேலும் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.
சமீபத்திய செய்தி: ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜாலியாக சுற்றிய சிறுத்தை - ஷாக்கிங் சிசிடிவி காட்சிகள்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News