The fire was caused due to leakage in the switch box while charging the cell phone. In the crash, a guard who was handcuffed to a switch box was admitted to hospital with burns.
Arumugam (62) hails from Puttur, Andhra Pradesh. Vinayaka has been working as a security guard at the Grand Palace Tower wedding hall in Chennai for the last 4 months. He was flipping a switch at Black Point to charge his cell phone last evening when an unexpected leak occurred and the switch box caught fire.
The fire caused burns to the head, face, arms, chest and abdomen of Arumugam. He was subsequently admitted to Kilpauk Hospital. Vepery police are investigating the incident.
செல்போனுக்கு சார்ஜர் போடும்போது சுவிட்ச் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில், சுவிட்ச் பாக்ஸில் கைவைத்த காவலாளி தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (62) என்பவர். சென்னை சூளையில் உள்ள விநாயகா கிராண்ட் பேலஸ் டவர் கல்யாண மண்டபத்தில் கடந்த 4 மாதங்களாக செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக பிள்க் பாயிண்டில் சுவிட்ச் போடும் போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு சுவிட்ச் பாக்ஸ் தீப்பிடித்துள்ளது.
இந்த தீ விபத்தால் ஆறுமுகத்தின் தலை, முகம், கைகள், மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.