சென்னை அருகே கால்பந்தாட்ட போட்டியை காணவந்து புழல் ஏரியில் குளித்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் பகுதியில் ஒருநாள் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காணவந்த புழல் பகுதியைச் சேர்ந்த ஷியாம் (22), விஜயராஜ் (19) ஆகியோர் தமது நண்பர்களுடன் அருகில் உள்ள புழல் ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது ஷியாம், விஜயராஜ் ஆகிய இருவரும் நீரில் முழ்கி தத்தளித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய இளைஞர்கள் இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக இருவரது உடல்களையும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்பந்தாட்ட போட்டியை காணவந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News