தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 3-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவின் தேவை... அவசியமா? இல்லையா?' எனக் கேட்டிருந்தோம்.
இதற்கு வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே!
ஆனால் ஒரு ராஜரிஷி போல வேண்டும். மகாராணிபோல் இருக்ககூடாது. அதிமுகவுக்கு தேவை பெரிய ராஜதந்திரிதான். ஏற்கனவே இரண்டு ராஜாக்கள் உருவாகிவிட்டார்கள். குழப்பம் ஏற்படக்கூடாது
இவர் இருந்திருந்தாலும்,இனி வருவதாலும் மாற்றமே இருக்காது. இவர்கள் மேல் உள்ள வெறுப்பு + தி.மு.க வின் மேல் உள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பில் வந்து ஸ்ட்ராங்காக அமர்ந்து இருப்பதால், அடுத்த முறையும் தி.மு.க வே வருவதை தடுக்கவோ,தவிர்க்கவோ முடியாது.மாறி மாறி வருவது மக்களுக்கு நல்லது தானே?
சசிகலா ஜெயலலிதாவை முன்னிறுத்தி காரியத்தை சாதித்தவர். அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு மக்களிடம் கிடையாது. அதிமுக அரசியல்வாதிகள் தன்னுடைய சுய லாபத்திற்கு அவரை பயன்படுத்திக் கொண்டார்கள்.
அது மக்களுக்கு தேவை இல்லை. மக்களில் ஒருவனாக இது அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பது தான் கருத்து.
குறிப்பு: இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதளபக்கங்களில் பகிரப்படும்.
சமீபத்திய செய்தி: போர்க்களத்தில் சிக்கியுள்ள வெளிநாட்டினவரை மீட்க பேருந்துகள் தயார்: ரஷ்யா தகவல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News