கில்கிறிஸ்ட் டூ அசாரூதீன்: 90+ டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை. அந்த சாதனையை இன்று படைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. அவர் நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய தருணத்தில் அந்த மேஜிக் நம்பரான நூறுக்கு அருகே உள்ள 90+ டெஸ்ட் போட்டிகள் வரை மட்டுமே விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறித்து பார்க்கலாம். 

image

93 டெஸ்ட் - ரணதுங்கா, டேல் ஸ்டெயின்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் அர்ஜுனா ரணதுங்கா மற்றும் அரவிந்தா டி சில்வா ஆகியோர் தங்கள் நாட்டு அணிக்காக 93 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் லெஜெண்ட் கேரி சோபர்ஸ் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தனது நாட்டுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

image

96 டெஸ்ட் - கில்கிறிஸ்ட் & நாசர் ஹுசைன்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த முன்னாள் விக்கெட் கீப்பர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மார்ஷ் ஆகியோர் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் விளாசி இருந்தார். 

image

98 டெஸ்ட் - கர்ட்லி அம்ப்ரோஸ்!

கிரிக்கெட் உலகின் மாவீரர்களில் ஒருவராக போற்றப்படுபவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கர்ட்லி அம்ப்ரோஸ். அவர் விளையாடிய காலகட்டத்தில் அபாரமான பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்தவர். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 405 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

image

99 டெஸ்ட் - அசாருதீன்!

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைக்க ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதம் வைத்தவர் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன். இந்தியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இவர். தனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் விளாசியவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சர்வதேச நாடுகளை சேர்ந்த 71 வீரர்கள் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார்.  

Source: TimesNow

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post