திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோயிலின் இணை ஆணையர் கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 250 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் ஆகியவை ரத்து செய்வதாகவும், 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கோயிலுக்கும் வரும் பக்தர்கள் மகா மண்டபத்தில் வழியாக சமமாக சென்று வழிபடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'குடும்பத் தலைவிகள் பெயரில்தான் நகர்ப்புற மேம்பாட்டு வீடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News