உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் ஜெகதீஸ். இவர், அதே ஊரில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஜெகதீஸ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News