கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகை கங்கனா ரனாத் கலந்துகொண்டு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் மஹா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய நடைபெற்றது. பஞ்சபூத ஆராதனையுடன் மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. மண்ணை காப்போம் என்ற கருப்பொருளுடன் விழா நடத்தப்பட்டது. ஆதியோகி சிலைக்கு முன்பாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் இடையே கண்ணை கவரும் வகையில் ஆதியோகி சிலையில் லேசர் ஒளி படர்ந்தது. மஹா சிவராத்திரி விழாவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதில் இருந்தும் பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். வெளிநாட்டினரும் மஹா சிவராத்திரியில் பங்கேற்றனர். இதில் நடிகை கங்கனா ரனாத் கலந்துகொண்டு நடனமாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கலந்துகொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News