விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் 3 கலசங்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1,500 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 6ஆம் தேதிதான் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருத்தாம்பிகை மூலவர் சன்னதி கோபுரத்தில் திருடப்பட்ட 3 கலசங்களும் 3 அடி உயரமுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News