"வேஷ்டி, சட்டை கிழிந்துக்கொண்டிருக்கிறது ராகுல் அங்கே சென்று இருக்கலாம்" - பாஜக அண்ணாமலை

சத்தியமூர்த்தி பவனில் வேஷ்டி சட்டைகள் கிழிந்து, சண்டை மட்டுமே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. சண்டையை சமாதானம் செய்து விட்டு ராகுல் காந்தி போக வேண்டும், தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சியை சீண்டி பார்க்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நிறைவு பெற்ற பின்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது...

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதே எண்ணத்தோடு பாரதிய ஜனதா பிரதிநிதிகள் முன்னேறி செல்வார்கள்.

image

பாரத பிரதமர் மீது தமிழக மக்களுக்கு உள்ள நம்பிக்கை, இன்னும் மேலோங்கி செல்ல வீடு வீடாhக அவரது திட்டங்களை எடுத்துச் செல்வோம், 2024 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றியை தமிழக மக்கள் பெற்று தருவர் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

முதல்வர் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டிற்கு நான் முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், முக்கியமான தலைவர்கள் அகில இந்திய அளவில் இங்கே வந்து பங்கேற்று கொண்டார்கள். ஆனால் அதே நேரத்தில் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் இருண்ட காலம் என்பது, எமர்ஜென்சி அப்போது மிசாவால் சிறையில் அடைக்கப்பட்டது தான் என்று தெரிவித்திருக்கிறார்கள், அந்த இருண்ட காலத்தை நடத்தி காட்டியவர்கள், அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தி தான்.

ஆனால் அவருடைய பேரன் ராகுல் காந்தி இன்று இந்த புத்தகத்தை மிக மகிழ்ச்சியுடன் வெளியிட்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. எப்படி காங்கிரஸ் திமுக கூட்டணி முரண்பாடாக இருக்கிறதோ, அதே போல தான் முதல்வரின் பேச்சு கூட முரண்பாடாக இருக்கிறது.

image

இந்தியா என்பது மாநிலங்கள் எல்லாம் இணைந்து உருவாகவில்லை, மொழிகளால் பிரிக்கப்பட்டது. உண்மையாகவே ராகுல் காந்தி சமரசம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், சத்தியமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் கட்சியினரை சமரசம் செய்யுங்கள்.

அங்கே வேஷ்டி சட்டைகள் கிழிந்து, சண்டை மட்டுமே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. சண்டையை சமாதானம் செய்து விட்டு ராகுல் காந்தி போக வேண்டும், தேவையில்லாமல் பாரதிய ஜனதா கட்சியை சீண்டி பார்க்க வேண்டாம். இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி பேசிக்கொண்டு இருக்கிறார் ராகுல் காந்தி, அதையெல்லாம் விட்டு உண்மையை பேச வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவில் மாத்தி மாத்தி புகழ்வதற்க்கு எதற்கு இப்படி ஒரு மேடை?

மிசாவில் உண்மையாகவே உள்ளே சென்றார் என்பது குறித்த விளக்கம், அந்த புத்தகத்தில் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். நீட் எதிர்ப்பு தொடர்ந்து திமுக செய்து வருவதற்கு காரணம், அவர்களது மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த மட்டுமே தவிர, உண்மையாகவே எழை மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு இதில் எதிர்ப்பு இல்லை.என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post