"தமிழகத்தில் எனது வாக்கை செலுத்துவதில் பெருமை அடைகிறேன்" - தமிழிசை சவுந்தரராஜன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், காலை 7 மணிக்கே முதல் ஆளாக, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

image

வாக்களித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் எனது வாக்கை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. நாம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். எல்லோரும் ஓட்டு போடுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட வேண்டும். தெலங்கானாவில் பழங்குடியினர் நடத்தக்கூடிய யாத்திரையில் கலந்துகொள்ளவேண்டும். இருந்தாலும், முதல் ஆளாக எனது வாக்கை இங்கு பதிவுசெய்துவிட்டு இங்கிருந்து புறப்படுகிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post