இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21,000 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் நெல்லை வந்தடைந்தார்.
டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிரண் வர்மா என்பவர் இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21,000 கிமீ தூரம் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர் கொல்லம் எர்ணாகுளம் கோயம்புத்தூர் மதுரை வழியாக இன்று நெல்லை வந்தடைந்தார்.
இதுவரை 50 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டள்ள அவர், 1700 கிமீ தூரம் நடந்துள்ளார். நாள்தோறும் 12000 பேர் ரத்தம் பெற தவறுவதாகவும் அதன் காரணமாக 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரத்தத்துக்காக காத்திருப்பதாகவும் 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இரத்தத்துக்காக காத்திருந்து யாரும் இறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடை பயணம் தேற்கொள்வதாக கிரண் வர்மா தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News