ககன்யான் திட்டத்திற்கான 'விகாஸ்' இன்ஜின் பரிசோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் இன்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பூமியில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இந்த ஆண்டிற்குள் முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள விகாஸ் இன்ஜின் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

image

இந்த சோதனையில், 25 விநாடிகளுக்கு விகாஸ் இன்ஜினின் செயல்திறன் பரிசோதிக்கப்பட்டது. மேலும் விநாடிகள் அதிகரிக்கப்பட்டு அடுத்தக்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post