கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடந்தது.

Class 5, 8 boards: Heeded parents' request, says CM - DTNext.in

இந்நிலையில் தற்போது, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தருமபுரி, சென்னை உட்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post