வருவாயை பெருக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

கட்டணமல்லாத வருவாயை பெருக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் மட்டுமல்லாது ரயில் நிலையங்களில் விளம்பரம் உள்ளிட்டவை மூலமும் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. கட்டணமல்லாத பிற வருவாயை அதிகரிக்க மக்களிடமிருந்து ஆலோசனைகளை பெற ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்துகிறது.

image

இதில், சிறந்த 10 ஆலோசனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்தக பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

image

புதிய ஆலோசனைகளை இம்மாதம் 17ஆம் தேதிக்குள் மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்த பிரிவிலோ அல்லது innovativeideasforrly@gmail.comஎன்ற இணையதள முகவரியிலோ சமர்ப்பிக்கலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post