சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடி மருந்தை செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளார். இதனிடையே, தலைமறைவான ஆலை உரிமையாளரை 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறை தேடி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post