ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினை அழைக்க முடிவு - ஜல்லிக்கட்டு கமிட்டி

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்படும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு, வரும் 15 ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்து விழா கமிட்டியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிகட்டு நடத்தப்படுமென்றும், ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினர்.

image

700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள கேலரியில் கிராம முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். ஆள்மாறாட்ட புகார் எழாத வகையில் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி கண்காணிக்கப்படும் என்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டியினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: கொரோனா ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது? - முழுவிவரம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post