சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் பெற்றோர்

Youth dies suddenly after eating chicken

சென்னையின் பிரபல சிக்கன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞரொருவர், திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு குறும்படங்களை இயக்கி வந்திருக்கிறார். இவர் நேற்று பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார். அங்கு நான்கு நண்பர்கள் சேர்ந்து பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர்.

Youth dies suddenly after eating chicken

பின்பு மருந்து கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்குச் சென்ற ரஞ்சித், இரவு 10 மணியளவில் தனக்கு இடது பக்க உடல் முழுவதும் வலிக்கிறது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் குடும்பத்தினர். செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

image

புகாரின்பேரில் 174 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வியாசர்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர். சிக்கனில் ஏதும் பிரச்னையா, அல்லது ரஞ்சித்திற்கு வேறு ஏதும் சிக்கலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தற்போது காவல்துறையினர் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே ரஞ்சித் எப்படி இறந்தார் என்பது தொடர்பாக தெரியவரும் என வியாசர்பாடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post