'பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்' - உத்தவ் தாக்கரே

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கி விட்டோம்’’ என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''பாஜகடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம். பாஜகவின் இந்துத்துவா என்பது வெறும் சந்தர்ப்பவாத இந்துத்துவா. அதை அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே பயன்படுத்துகிறது. சிவசேனா கட்சி பாஜகவை தான் கட்சியை விட்டு வெளியேற்றி உள்ளது. இந்துத்வாவை அல்ல. சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையைக் கைவிடவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே பாஜக மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேருகிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதுதான் பா.ஜ.க.வின் கொள்கை'' என்றார்.

image

சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ''மகாராஷ்டிராவில் பாஜகவை அடிமட்டத்தில் இருந்து மேலே கொண்டு சென்றோம். பா.ஜ.க.வுக்காக வட இந்தியாவில் போட்டியிடாமல் இருந்திருந்தால், சிவசேனா கட்சியில் இருந்து ஒரு பிரதமரை இந்தியா பார்த்திருக்க முடியும்'' என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேல் கூட்டணியில் இருந்த பாஜகவும், சிவசேனாவும், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலையும் கூட்டணி வைத்தே சந்தித்தன. ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் இந்த கூட்டணி முறிந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது. அதுமுதல் பாஜக- சிவசேனா கட்சிகளுக்கிடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வருகிறது.

இதையும் படிக்க: என்னதான் நடந்தது கொடுங்கையூர் காவல் நிலையத்தில்?-சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் பேட்டி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post