`இபிஎஸ் - ஜெயக்குமார் கட்சியை விட்டு நீக்கம்’- திண்டுக்கல் அதிமுக நிர்வாகிகள் போஸ்ட்டர்!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நத்தம் விஸ்வநாதனை கட்சியை விட்டு நீக்கியதாக திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் `முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கு வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு.

image

எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை தலைமைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் நடந்து வரும் வேலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதன்முறையாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.வீரமணிகண்டன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post