கடந்த 3 நாட்களில் ரூ.675.19 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.675.19 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

12ம் தேதி சென்னையில் 31.41 கோடிக்கும், திருச்சியில் 30.78 கோடிக்கும், சேலத்தில் 29.42 கோடிக்கும், மதுரையில் 29.40 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாட்டில் 155.06 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

13ம் தேதி, சென்னையில் 39.13 கோடிக்கும், திருச்சியில் 41.58 கோடிக்கும், சேலத்தில் 40.67 கோடிக்கும், மதுரையில் 42.71 கோடிக்கும் ஆக மொத்தம் 203.05 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

TASMAC shops won't open in Chennai on May 7 | The News Minute

அதேபோல, 14ம் தேதியான நேற்று, சென்னையில் 59.28கோடிக்கும், திருச்சியில் 65.52 கோடிக்கும், சேலத்தில் 63.87கோடிக்கும், மதுரையில் 68.76கோடிக்கும், கோவையில் 59.65 கோடிக்கும் என ஆகமொத்தம் 317.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் ரூ.675.19 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post