திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் உரிமையாளர் மீது காளை பாய்ந்ததில் அவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 400 மாடுகள் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் அவரது காளையை வாடிவாசல் அருகே அழைத்து வரும் பொழுது திடீரென காளை பாய்ந்ததில் அவர் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.மீனாட்சி சுந்தரத்திற்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பொம்மை கடை வைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM