ஓமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை, சென்னை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை ஆய்வு செய்த மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 91 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாகவும், இதில் கொரோனாவுக்கு மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். டெல்டா வகை தொற்று 10 முதல் 15 சதவிகிதம் பதிவாகி வருவதாகவும், தொற்று பாதிக்கப்பட்ட 7 சதவிகிதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறைச் செயலர் குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM