நாட்டில் கடந்த மே மாதத்துக்குப் பின் நேரிட்ட பேரிடர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடு கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதி மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக அண்ணாமலை கூறினார். மத்திய அரசு முதல்கட்டமாக 6 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எஸ்டிஆர்எஃப் எனப்படும் மாநில பேரிடர் நிதிக்கு தாம் தலையிட்ட பிறகே தமிழ்நாடு அரசு மாநில அரசின் 25 சதவிகித பங்கான 300 கோடி ரூபாயை ஒதுக்கியதாக அண்ணாமலை கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Tags:
News