ரூ.120 கோடி ரூபாய் கடன் நிலுவை - பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி

கடனை திருப்பிச்செலுத்தவில்லை எனக் கூறி சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வருகிறது பிரைம் சரவணா ஸ்டோர். இந்நிலையில், இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூ.120 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தி.நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளது.

image

ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post