
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு உள்ள நிலையில், மேலும் பல புகார்கள் வந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நடுகுதகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமை துவக்கிவைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சிறந்த கால்நடை மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சான்று மற்றும் மெடல்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் பேசும்போது... ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை துவங்கியபோது தங்கள் கைகளை மீறி போய்விட்டதாக கடந்த ஆட்சியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் கைவிரித்து விட்டனர்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அதனை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் திறமையாக கையாண்டு மக்களை காப்பாற்றினார். அதே போன்று தற்போது ஒமைக்ரான் வைரஸ், மூன்றாம் நிலை வந்தாலும் தமிழக அரசும் முதல்வரும் அதனை திறம்பட எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

மேலும் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீது பல புகார்கள் வந்துள்ளது. (wait and see) பொறுத்திருந்து பாருங்கள் என்றார். தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சி மட்டுமல்ல ஆளும்கட்சி தவறு செய்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News