
சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை - ஓஎம்ஆர் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி சாலையிலிருந்து மலர் மருத்துவமனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் சி.பி.டி சந்திப்பில் வலதுபுறம் திரும்ப இயலாது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த சந்திப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்பு இந்த சந்திப்பில் வலதுபுறம் திரும்ப வசதி இல்லாத காரணத்தால் ராஜீவ் காந்தி சாலையில் கானகம், பகுதியிலிருந்து வந்து அடையார் நோக்கி செல்லும் வாகனங்கள் 'யூடர்ன்' திருப்பம் திரும்ப வழிவகை செய்யப்பட்டது. தற்போது இந்த திருப்பத்தால் சர்தார் வல்லபாய் சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே அமலில் உள்ள 'யூடர்ன்' திருப்பம் மூடப்படுகிறது. இந்த வகை போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு பயனளிப்பதாக இருக்கும் எனவும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News